Truly awesome lines from 7-G Rainbow Colony Song!
தீயின் மனமும் நீரின் குணமும்
தெளித்துச் செய்தவள் நீ நீயா ?
தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா ?
நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா ?
வேலைவெட்டி இல்லாப் பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா ?
இருவிழி உரசிட ரகசியம் பேசிட
இடிமழை மின்னல் ஆரம்பம்
பாதம் கேசம் நாபிக்கமலம்
பற்றிக்கொண்டதும் பேரின்பம்
தகதகவென எரிவது தீயா ?
சுடச்சுடவெனத் தொடுவது நீயா ?
தொடுத் தொடுவெனச் சொல்லுகின்றாயா ?
கொடுக் கொடுவெனக் கொல்லுகின்றாயா ?
Friday, May 11, 2007
Sunday, August 20, 2006
001 Sangeethamaey Sannidhi: Tamil Song - Agaram ippo Sigaram aachu
001 Sangeethamaey Sannidhi
Tamil Song -அகரம் இப்போ சிகரம் ஆச்சு
This song from the movie called "Sigaram"..and music was rendered by One and Only SPB...with Yesudas singing this song...which are truly inspiring.....
இப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....நம்பிக்கையே நல்லது..எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சந்நிதி !!! சந்தோஷம் சொல்லும் சங்கதி!!!!
கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன
மழைவெள்ளம் போகும்; கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மயே நம்பிக்கை ஒன்றே நன்மையே !!!!
தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாறப் பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!!!!
Subscribe to:
Posts (Atom)